"ஆதலினால்தான் போய்விட்டாய் போல்"

"ஆதலினால்தான் போய்விட்டாய் போல்"

பிறர்க்கென தொடங்கிய
உன் பலவழி சந்தர்பங்களில்

இடைவழிக் கடக்கையில்
என் ஆறிடும் வியர்வைகள்

உன்மொழி கேட்ட
அந்த ஒருநொடி மட்டும்தான் சகா

வழக்கம்மீறிய
உன் செய்கைகள்

ஒருநாளும் எங்கே யாரும்
கடமை மறந்திடுவார்களோ
எனத்தேடிய உன்போக்குவரவுகள்

உன் பக்கம் திறந்திருப்பினும்
இன்றெல்லாம் உன் சுவாச நடமாட்டம்
இல்லாதிருப்பதாலோ என்னவோ
நான் அநாதை என்றே உணர்கிறேன் சகா

வீம்புக்காய் சென்றுவிட்டாயா
விளையாட்டாய் மறைந்திருக்கிறாயா சகா

இல்லை
யாரும் உன்னை தேடவில்லை
என்பதாலா ஒளிந்திருந்து பார்க்கிறாய்
கண்கட்டி வித்தைகள் எனக்குத்தெரியவில்லை சகா ,,,

உன் மௌனம்கொத்தி
தின்று கொண்டிருக்கும் என்மௌனம்
வலியால் சொல்லுகிறது உன்னிடம் சகா

நீ காணாமலேயே
சென்றுவிட்ட உன்போக்கு
அதற்கு பிடிக்கவில்லையென்று சகா

நீ பின்னால் நின்று
பார்த்துக்கொண்டிருக்கும்
பட்டுப்போய் சிதிலமடைந்திட்ட
மரத்தைப் போலத்தான் இங்கும்
சில மனங்களின் வெளிவேஷங்கள் சகா

வார்ப்பக குடுவைகளுக்குள்
உன் விழிநீரபிஷேகம் செய்துவிடு

ஆணியாய் உருமாறிய
அந்தஉன் உணர்வு வலிகளை
அம்மரத்திலேயே அரைந்துவிட்டு போய்விடு சகா

ஆனால் ,,,,
என்னோடு நானே நிறுத்தாமல்
கேட்டுக் கொள்ளுகிறேன் சகா

துணையற்ற வெற்றுப்பயணங்களுக்கு
இரையாகிய உன் கால்களை
நீ வெறுத்துவிட்டமையாலா
இன்று காணாமல் சென்றுவிட்டாய் சகா

"ஆதலினால்தான் போய்விட்டாய் போல்"

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (27-Jun-13, 1:48 pm)
பார்வை : 223

மேலே