ஏட்டுக்கல்வி அது ஏக்கக்கல்வி

கர்மவீரர் காமராஜரின் கனவுபலித்தது
பள்ளிகள் ஜொலித்தது
அரசுப்பள்ளிகள் ஆங்காங்கே தொடங்கி
கல்விச்சேவை பொதுவுடமையானது..............

படிப்பற்றவர்கள் எல்லாம்
படிப்பறிவை பெறுவதற்கு
ஏழைக் குழந்தைகளும்
கல்வி கற்க ஏதுவாகியது ..............

தூரம் அதிகம் இருந்தபோதும்
பள்ளிசென்றார் கல்விகற்றார்
ஏற்றத்தாழ்வு எதுவுமில்லாமல்
அரசுப்பளிகளில் அனைவரும் பயின்றார் ..........

தமிழே கற்றார்
தமிழையே கற்பித்தார்
தமிழ்மீது பற்றுகொண்டார்
தமிழையே வணங்கிநின்றார் ...........

ஒன்றாய் பயின்ற அந்த காலத்தில்
நன்றாய் இருந்த கல்வித்தரம்
இன்று அந்த நிலைமை மாறி
ஏக்கம் கொள்ளுது ஏழை குலம்.............

அரசுப்பள்ளிகள் ஆதிக்கம் குறைய
தனியார் பள்ளிகள் நெஞ்சை நிமிர்த்தி
ஏழைகள் நெஞ்சில் அம்பை பாய்சுது
ஏங்கி தவிக்க காரனமாகுது ........................

இருப்பவர்கள் எல்லாம் தனியார் கல்வி
இல்லாதவர்களுக்கு எல்லாம் அரசுப்பள்ளி
எங்கு செல்லுது நாட்டின் நிலைமை
என்ன ஆவது ஏழைகள் நிலைமை ?

செம்மொழியான தமிழ்மொழி எங்கே
ஆங்கிலம்தானே பையை நிரப்புது
பாரதியும் பாவலரும் மறைந்துபோக
ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும் நிறைந்து போனார் ...

கடமைக்காக கல்வி போதிக்கும்
அரசுப்பள்ளிகளின் அவலம் மாறுமா ?
போட்டிபோட்டு பணத்தை பிடுங்கும்
தனியார் பள்ளியின் தாகம் தீருமா ?

வியாபார பொருளாக கல்வியும் ஆச்சு
விளம்பரம் தேடி தரமும் போச்சு
பணவரவை மட்டும் பார்க்கும் பள்ளிகளிடத்தில்
பகுத்தறிவு ஏனோ மறைந்துபோனது ............

இருப்பவர்க்கெல்லாம் சொகுசுக்கல்வி
இல்லாதவர்களுக்கோ சோகக்கல்வி
நடுநிளைக்கல்வி நாட்டில் இல்லே
சமத்துவக்கொள்கை நம்மிடம் இல்லே .........

பணத்தை மட்டும் பார்க்கும் பள்ளிகள்
திறமையை பார்க்க ஏனோ மறக்குது
நன்றாய் படிக்கும் ஏழை பிள்ளைக்கும்
நன்று செய்ய ஏனோ மறக்குது ..............

அறிவு நிறைந்த ஏழைபிள்ளையின்
ஆசைமட்டும் நிறைவேறவில்லை
பள்ளிகள் போடும் கட்டண பட்டியலில்
ஏழைக்கல்வி அது ஏக்ககல்வி யாகுது !

எழுதியவர் : வினாயகமுருகன் (27-Jun-13, 2:53 pm)
பார்வை : 858

மேலே