சாதனை

வீடு கட்டிவிட்டேன்
வங்கிக்கடன் இல்லாமல்
துணையை தேடிக்கொண்டேன்
ஜாதகம் பார்க்காமல்
வம்சம் தளைக்க செய்தேன்
மருத்துவம் பார்க்காமல்
முழு வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன்
ஒரு காசு இல்லாமல்
நான் - சிட்டுக்குருவி .

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (27-Jun-13, 8:21 pm)
பார்வை : 73

மேலே