யோசிப்போம் /வாசிப்போம் /நேசிப்போம் /சுவாசிப்போம் /பேசிப்போம்

தினமும் வருவது தினத்தந்தி
திறந்து பார்க்காத வரை
இருக்காது நிம்மதி

தவறாமல் பூப்பது தினமலர்
பறித்து நுகர்ந்து கசக்கி எறிவதில்
உள்ளதோ தனி சுகம்

காத்திருந்து உதிப்பது தினகரன்
கலங்காமல் கையில் எடுப்பதில்
இருப்பதோ ஒரு வெறி

மாலை வருவது மாலைமலர்
மயக்கதிலிருப்பதோ உன் மனம்
வருடுவதில் வசந்தமே

தினமும் கேட்பது தினமணி
திகட்டுவதில்லை இவர்களின் செய்தி
காதிற்கு இன்பமே

எத்தனை செய்தித்தாள் வந்தாலென்ன
செய்திக்கும் குறைவில்லை
வாசகங்களுக்கும் குறைவில்லை
வாசகர்களுக்கும் குறைவில்லை

மண்ணில் சாதனை தொடரத்தான் செய்கின்றன
சமுதாயம் சரிந்துதான் இருக்கிறது
குற்றமும் குறைந்ததில்லை

படிப்பவர் பகுத்தறிவார்களா? இல்லையா?
காசுக்கும் புகழுக்கும் வரும்
ஏகோபித்த பார்வையால் கவலைபடுவதில்லை புள்ளிவிவரம் சொல்லும் நிறுவனம்

..........................ஒருபொருளில் பல நிறுவனம்
..............................................................தொடரும் .......

எழுதியவர் : bhankl (29-Jun-13, 6:27 am)
பார்வை : 285

மேலே