கற்பனைக் குதிரையின் கடிவாளம்

இன்று சமைந்த
இளம் மங்கையாய்
இருண்டு
முகம்
மூடிக்கொண்ட
மேகத்
திரள்
பார்த்துத்
திறந்து
கொண்டது என்
கற்பனைக்
குதிரையின்
கடிவாளம்....
அதைக்
கட்டுப்படுத்த
மனமின்றி
அதன்
முதுகில்
ஏறி
சவாரித்தேன்
ஒரு மேகத்தோடு .....
எதிரே
இரண்டு
வெண்மேகங்கள்
என் கருமேகத்தைப்
பார்த்து
உதடு பிலுக்கி
நொடியில்
தோன்றி
மறையும்
வான வில்லின்
வர்ணம் பூச
வளைந்து
சென்றன
வெளிர்
நங்கையின்
வேஷமிட்டு.....
படைக்கும்
கடவுளாக
நான்
இங்கு
உயிரற்ற
மேகங்களில்
ஓராயிரம்
உயிர்
பிழைத்து
உலாவும்
கோலம்
இங்கு.....
மேகத்தில்
தான்
எத்தனை
விந்தைகள்
அதோ
ஆமை
வடிவில்
இரண்டு
மேகங்கள்
முயல்
வடிவில்
இரண்டு
மேகங்கள்
இரண்டுக்கும்
இடையில்
மீண்டும்
ஒரு
வரலாற்று
ஓட்டப்பந்தயம்
என்னால்.......
வரலாற்று
வால்மீகியின்
இராமாயணம்
முதல்
சூரியத்
தொலைக்காட்சியின்
மகாபாரதம்
வரை
அத்தனை
காட்சிகளும்
வான
வெளியில்
எத்தனை
தத்ரூபமாய்.....
என்
படைப்பில்
உருவான
உயிர்களின்
இராச்சியப்
போர்
மூண்டால்
அஸ்திரங்கள்
பாயும்
சப்தம்
அண்டமெங்கும்
கேட்கும்
ஆனாலும்
முடிவு
என்றும்
சுபமே....
போரின்
முடிவில்
பாயும்
வெண்
குருதி
புகுந்து
மண்
குளிரும்
பின்
சேர்ந்து
உருவெடுக்கும்
பெரும்
ஆறாக
வடிவெடுக்கும்
பெரும் சமுத்திர
ஊராக.....
மீண்டும்
என் உலகம்
படைக்க
சூரியன்
எழுந்து
நீரை
வடித்து
கரு
மேகம்
படைத்து
எனை
அழைத்து
என்
கற்பனைக்
குதிரையின்
கடிவாளம்
திறந்து
விட்டான்......
நான்
போகிறேன்
என் உலகம்
படைக்க
நீங்களும்
வாருங்கள்
அதன்
எழிலை
ரசிக்க......