ஹைக்கு கவிதை

திருஞானசம்பந்தரை அழையுங்கள்
திறந்த டாஸ்மாக்
மூடமுடியவில்லை

உதிரும் இலைக்கு
சிலந்தி வலையில்
திரிசங்கு சுவர்க்கம்

விண்முகில் நீர்க்கோடாய்
தரையில் மலர்ந்தாள்
பூமித்தாய்

பூமியைப் பிளந்தது
இலைக்க்க்கைகளைப் பரப்பியது
தலையில் பூ சூடியது புல்

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (30-Jun-13, 9:15 pm)
பார்வை : 64

மேலே