ஏழையின் உள்ளம்

ஜோ! வென்று மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. அந்த பிஞ்சு விரல் தன் தாயின் விரல்களைப் பிடித்துக்கொண்டு மழையின் தூறல் விரட்ட வேகமாக வீட்டை நோக்கி பிடித்து விடுவோம் என்று கால்கள் தன் நடையைத் தேங்கியிருந்த ரோட்டு நீரில் ‘தளக் தளக்’ என சண்டையிட்டு முன்னேறி கொண்டிருந்தது.
அம்மா! வெளியிலேயே பரவாயில்லை. வீட்டுக்குள்ளே வந்து பாருங்க! வீடு மூழ்க ஒரே குளம் மாதிரி தோன்றுது! நான் எங்கே உட்கார்வது அம்மா என்றாள் கனகம். சிறு சினுங்கலுடன்....
இதோ இரும்மா நானும் உள்ளே வந்துவிடுகிறேன் என்றவள், நொடிக்குள் வீட்டிலுள்ள நீரை வழிகாட்டி ஒட வைக்கிறாள். அம்மா பசிக்கிறதே! என்ற தன் குழந்தையின் குரலைத் தன் காதில் வாங்கியவளாய் மெல்ல திரும்பி அங்கேயிருக்கிற பாத்திரத்தைக் கொஞ்சம் எடுத்து கொண்டு வாம்மா! என்றவள் அடுப்பைப் பற்ற வைக்க நகர்ந்து தீப்பெட்டி தேட ஆரம்பிக்கிறாள்.......
மிதக்கும் நீரில்.... மிதந்தது... ஏழையின் இல்லமல்ல அத்தாயின் உள்ளம்.