###### என்ன செய்வா எங்க அக்கா ?? ######
செடிகொடிகள் காய்த்துவிட்டால்
காத்திருப்பதில்லை =ஏழை
பெண்மையிங்கே பூத்துவிட்டால்
மாலையாவதில்லை.............
விலங்கினங்கள் பூப்பெய்தி
புழுங்கிசாவதில்லை =இந்த
மனிதனைப்போல் காசுபார்த்து
காதல்செய்வதில்லை...............
கற்புநெறி கண்டுயாரும்
துணையை தேடவில்லை =மனம்
முதிர்கன்னி முகம்பார்த்தால்
மூச்சுவிடுவதில்லை.................
மொழியறியா பறவைகூட
உணர்ச்சி விடுவதில்லை = இந்த
விதியறியா சமூகமோ
உணர்ந்து கொள்வதில்லை............
வயதான கன்னியர்கள்
வாய் திறப்பதில்லை = மனித
வாய்கொண்ட நாவுதனில்
மாட்டிக் கொள்வதில்லை.............
முத்தசத்தம் கேட்கும்போதும்
நாணம் விடுவதில்லை = அன்னி
முனகலிட்டு கூவும்போதும்
காதில் நுழைப்பதில்லை..............
கனவுவந்து காயம்செய்தும்
கண்டு கொள்வதில்லை = இந்த
கன்னியர்கள் காய்த்தபோதே
கன்னி கழிவதில்லை.................
####### பாசகுமார்