உன் வரவைப்போலாகுமா?..........

காதலெனும் ஒரு பறவை
என்னைவந்து தீண்டவே
காயம் பலமானதால்
கண்ணீர் மருந்தானதே

பாலைவனச் சோலையிலே
காதல்நீரைத் தேடினேன்
காதல்நீரும் என்வாழ்வில்
கானல் நீரானாதே

மனந்தான் நினைக்கின்றது
மறுகனமே வெறுக்கின்றது
என்வாழ்வில் யார்தான் வந்தாலுமே
உன் வரவைப்போலாகுமா?

எழுதியவர் : வென்றான் (2-Jul-13, 1:01 pm)
பார்வை : 128

மேலே