நிறைவும் வெறுமையும்
விரியாத மொட்டுக்களைக் கண்டாள் .
விரிந்து பரந்த கடலையும் பார்த்தாள்
மலர்ந்த பூக்களையும் நோக்கினாள்
மலராத பெண்மையும் அறிந்தாள்
வெவ்வேறு கோணங்களில் அவை தாக்கின
நிறைவும் வெறுமையும் அவளை ஒருங்கே சாடின
மனம் அலை பாய்ந்த்தது வாழ்வின் வேற்றுமையை
நினைத்து .