நெடுநாள் கனவு
விடுதலைக்காய் வஞ்சிக்கப் பட்டு
செங்குரிதி சிந்திய தமிழனின்
ஈழம் விடுதலைப் பெற வேண்டும்
கஞ்சிக்காய் முள் வேலிக்குள் முடங்கிட்ட
தொப்புள் கொடி உரவுகள் தன் மானத்
தமிழ் சிங்கங்களாய் வீர முழக்க மிட வேண்டும்
அரை வயிரு கஞ்சிக்காய் உறிகி ஓடும்
தார் ரோட்டில் வியர்வை துளிகளை
சிந்திய தொழிலாளி உள்ளம் குளிர்ந்து
சிரிக்கும் நாள் வர வேண்டும் - அவர்
பிள்ளைகள் இலவமாய் உயர் கல்வி
படிக்க வேண்டும்
ஜாதிப் போர்வைக்குள் புகுந்து
மனிதத்தை மிதித்து மேல் ஜாதி
எனும் நிர்வாணத்தை தோலுரித்து காட்டி
கீழ் ஜாதிப் பெண்களின் முலைப் பாலை பருகி
காம மிருகமாய் திரியும் ஜாதி சனியன்கள்
தொலையும் நாள் வர வேண்டும்
காம போதையில் கல்லான பெண் சாமிகளின்
அங்கத்தை தினம் தடவி தடவி அர்ச்சனை
செய்யும் போலிச் சாமியார்கள் ஒழிய வேண்டும்