ஹீரோ 'டாவு'-ஹீரோயின் 'பப்ளி'-நண்பன் 'டோங்கு'
அன்று, ஹீரோ 'டாவு' ஏதோ குதிரை ரம் அடித்தது போல் மட்டையாகி கிடந்தான்..வழக்கமாக ஹீரோ 'டாவு' துயில் களையும்போது சன் பல்லு விளக்கி கொண்டிருக்கும். ஆனால், அன்று துப்பிக்கொண்டிருந்தது!!
அவசர அவசரமாக ஹீரோ 'டாவு' எழுந்து லுங்கியை சரி செய்துகொண்டு பாத்ரூமை நோக்கி ஓடினான்..ஆனால், ஏற்கனவே 20, 30 'டாவு'க்கள் டோக்கன் போட்டு நின்று கொண்டிருந்தார்கள்..என்ன செய்வதென்று தெரியாமல்?? கையிலிருந்த ஆண்ட்ராய்ட் மொபைலை இரண்டு தடவை தேய்த்து 'மூஞ்சிபுக்'கை லாக்-இன் செய்து, வழக்கமாக கடலை வறுக்கும் 'வாணல்'களுக்கு 'குட் மார்னிங்' என்று மெசேஜ் தட்டி விட்டான். ரிப்ளே வரவில்லை..விடிய விடிய சாட் செய்த காரணத்தினால் 'வாணல்'களிடமிருந்து ரிப்ளே வரவில்லை போலும்..சன் யாவற்றையும் சைட் அடித்துக் கொண்டிருந்தது.
கடைசியில் உருண்டு-பிரண்டு கதவில்லாத பாத்ரூமில் டோக்கன் போட்டான்..அதில், தாழ்ப்பாளும் இல்லை..ஓட்டை பக்கெட்டுடன் ஹீரோ டாவு 'காக்கா' குளியல் போட்டு வெளியில் வருகையில் மற்ற 'டாவு'க்கள் சலிப்பு ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.
எந்த டிரெஸ் அணிய?? என்ற 'கன்பியூஷன்'களுக்கு மத்தியில் நண்பன் 'டோங்கு'வின் டிரெஸ்ஸை போட்டுக்கொண்டான்..நண்பன் 'டோங்கு' டோக்கன்களுக்கிடையில் சிக்கி கிழிக்கப்பட்டு கொண்டிருந்தான்..இதில், 'குய்யோ-முய்யோ'னு சவுண்ட்கள் வேறு..
எல்லாம் கடந்து குட்டிசுவர் அருகே வருகையில் சன் பல்லிளித்து கொண்டிருந்தது..அன்று மட்டும் 'குர்குரே' தின்ன மங்கி போல் வந்துபோகும் 'ஆண்ட்டி'களை 'பே' என்று பார்த்துக் கொண்டிருந்தான்..ஆனால், ஹீரோயின் 'பப்ளி' வருவதற்கு முன்கூட்டியே வந்துவிட்டான்..
ஹீரோயின் 'பப்ளி' பேருந்திலிருந்து இறங்கினாள்..வழக்கத்திற்கு மாறாக அன்று குண்டுமல்லி சூடியிருந்தாள்..கொஞ்சம் 'குட்டி தொப்பை' போட்டிருந்தாள்..20 நாட்களுக்குள் இவ்வளவு பெரிய மாற்றத்தை 'டாவு' எதிர்பார்க்கவில்லை..இடுப்பிலிருந்து 3 இன்ச் அளவிட்டு புடவை விலகியிருந்தது..அந்த, 3 இன்ச் கேப்பில் 2 மடிப்புகள்..கிட்டத்தட்ட, அருவியிலிருந்து கொட்டுவது போலத்தான் வியர்வை வழிந்துகொண்டிருந்தது இருவருக்கும்..
ஹீரோயின் 'பப்ளி' கர்சீப்பை எடுத்து ஒத்தடம் கொடுப்பது போல் ஒத்திக்கொண்டாள்..உதட்டில் மட்டும் ஒத்தி எடுக்கவில்லை. 'லிப்ஸ்டிக்' இலுப்பி விடும் என்ற காரணத்தினாலோ?? என்னவோ??
கர்ச்சீப்பை விசிறியாக்கி 'பப்ளி' விசிற?? 'டாவு' ஜொள்ளிட்டுக் கொண்டிருந்தபோது..'டாவு'வின் முதுகை யாரோ தட்ட..திரும்பி பார்த்தான்..நண்பன் 'டோங்கு' நின்று கொண்டிருந்தான்..
'ஏன்டா! மயிரு..சொல்லிட்டு ட்ரெஸ்ஸ போட மாட்டியா??'னு கேட்க..'ஓட்டவாயி நாராயணன்' ட்ரேட் மார்க் சிரிப்பை 'டாவு' சிரித்தவாறு கிளாஸை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்..
ஹீரோயின் 'பப்ளி' அங்கு அட்டனென்ட்ஸ் எடுத்து கொண்டிருந்தாள்..
'டாவு'க்கு சலிப்பு ஏப்பம் எட்டிப்பார்த்தது..
'டாவு??'
'ப்ரசன்ட் மேடம்'