இதுவும் கடந்து போகும்??
நான்-
அதுவரை
அவளை அங்கே பார்த்ததில்லை?
அன்று தான் பார்த்தேன்!
அதுவும் பிணமாக-
பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில்;
'கிங்சை' வாங்கி பற்ற வைத்து விட்டு
'என்னாச்சு?' என்றேன்!!
'ஏதோ, நாலு பேரு சேந்து ரேப் பண்ணிட்டானுங்க..
இங்க தான் குந்திகினு பிச்ச எடுக்கும்..
நேத்து நைட் தான் எவனோ பண்ணிட்டானுங்க போல..
முனிசிபாலிட்டிக்கு சொல்லியாச்சு சார் ' என்றார் பெட்டிக்கடைகாரர்!!
தள்ளி நின்று பார்த்தேன்-
முகம் சிதைந்து போயிருந்தது;
மார்பகங்கள் அறுக்கப்பட்டிருந்தது;
பூ விற்கும் கிழவி ஒருத்தி-
சிகப்பு சேலையை அவள் மேல் போர்த்தியிருந்தாள்!
சிறிது நேரத்தில் துப்புரவு பணியாளர்கள் பிணத்தை கொண்டு சென்றனர்!
அவர்கள் தங்கள் சாபத்தை தூவி விட்டு கோவிலுக்குள் நுழைந்தனர்!!
நான் மூன்றாவது பஃப் இழுத்த படி நகர்ந்தேன்!!!
தெரு நாய்கள் பிணத்தை துரத்தி சென்றன..