நாய்க்கன் கொட்டாய் காதல்

இச்சாதியில் பிறக்க
இடைச்சாதி கண்ணன் அருளினானோ
பொஞ்சாதியா இருக்க
பெண்ணாய் இருத்தல் போதாதோ
எச்சாதியும் இருக்கட்டுமே
என்னிணை அவனாக கூடாதோ
என்சாதி கௌரவம்
எங்களை பிரிப்பதால் மீளுமோ

மனித உயிர்கள்
மனதால் இணைவது காதல்
இனிய மலர்கள்
இல்லறம் காண்பது வாழ்தல்
கனிந்த இதயத்தை
கல்லெறிந்து தாக்குவது சிதைத்தல்
ஏனிந்த ஆயுதத்தை
ஏற்றன பற்பல அரசியல்

தாழ்ந்தவன் இவனென
தமுக்க டிக்க யாரிவன்
தோழனை தேர்ந்தேடுத்து
துணையாய் கொள்ளல் ஆகாதோ
வாழ்வை தொடங்கையில்
வாழ்வழித்ததே சாதிவெறி – அதனை
வீழ்வித்திட என்னவழி
வீணான சாதியை விட்டொழி

எழுதியவர் : வேல்முருகன் (6-Jul-13, 12:57 pm)
பார்வை : 61

மேலே