நட்பு ஒரு காவியம்!!!!!!!
காலங்கள் மாறலாம்
கனவுகள் கலையலாம்
உறவுகள் பல உருவாகலாம்
நம் உணர்வுதான் மாறுமா
இல்லை
நம் நட்பின் நம்பிக்கைதான் தீருமா
உறவையும் உணர்வையும் மட்டும் சொல்ல
இது காதலும் இல்லை மோதலும் இல்லை
உயிர் உள்ள வரை உடன் வரும் உறவுகளின் சங்கமம்
ஆயிரம் உறவுகள் உன் அருகே அமரலாம்
அந்த உறவுகளின் உன்னதத்தை உன் முன்னே வைக்கலாம் ஆனால்
உன் சிரிப்பிற்கு சிறகாகவும்
உன் விழிக்கு இமையாகவும்
உன்னுடன் இருக்கும் அந்த உறவுதான் நட்பு
இப்படி வார்த்தைகளில் வளர்ந்து
உணர்வுகளில் ஒன்றாகி
கனவிலும் நினைவான நட்பு
என்றும் நிலைக்கட்டும்
மனதில் ஒரு காவியமாய்.............