என் உயிர் நண்பா!!!
என்னுயிர் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் நண்பா..
அந் நினைவிருக்கும் வரைக்குமே
என் உயிரும் இருக்கும்....
சோகத்தில் வாடிய போது
நீருற்றி காத்தவன் நீ..நான்
போர்வாளாய்ப் போராடத் துணிந்தாலும் அதில்
கூர் முனையாய் நிற்பவன் நீ...
தள்ளாடியபோது தோள் தந்து
தாங்கியவன் நீ......
உன் தயவால் தானடா
நானின்றும் உயர்வாய்தெரிகிறேன்.....
என்னுயிர் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் நண்பா..
அந் நினைவிருக்கும் வரைக்குமே
என் உயிரும் இருக்கும்..
கண்ணிமைகூட ஓர்பொழுதில்
கண்ணிமைக்க மறந்து போகுமடா
நண்பா_ உந்தன் அழகுருவம்
என்னிதயம் விட்டுப் போகாது!!!
நண்பா-உலகின் உன்னதம் யாதென்று
உருப்படியாய் ஓராய்வு செய்தேன்-என்
அறிவுக் கெட்டிய தூரம் சென்று அது
அன்பொன்று தானென்று தானடா கண்டறிந்தேன்..
மண்ணில் புதையுண்ட கரித்துண்டு மக்கி
விண்ணில் மீனொத்த வைரமென-ஒரு
பெண்ணின் கருவறை சுமந்திட்ட நீ
என்னில் சுடர்விடும் வைரமன்றோ!!!!
பண்பின் உறைவிடம் நீயடா..
நண்பா-என் பைந்தமிழ் உன்னை பாடிடவே
உன்னில் எத்துனை எத்துனை நற்குணங்கள்
கண்டு அத்துனை நரம்புகளும் சிலிர்குதடா!!!
உலகத் தூரிகை வரைந்த
ஒற்றை ஓவியம் நீ..
மொழிகள் நூறுகூட
மெச்சிடும் காவியம் நீ....
இமைக்கும் நொடியளவும் கலங்காமல்
இயற்கையின் ரசிகனாய்-நல் இசைக்குத் தலைச் சாய்ப்பவனாய்
இலக்குகள் கொண்டவனாய் -இயைந்து வாழ்பவனே
வழிகள் எனக்கில்லை போடா -நீயும் எனக்கொரு தாயே!!!
சுவாசிப்பதா?உன்னை நேசிப்பதா?
இரண்டில் ஒன்று தான் என்றொரு வேளை வந்தால்
என்- கடைசி சுவாசத்திலும் சொல்வேன் நண்பா
நான் உன்னை நேசிக்கிறேன் என்று!!
மறுபடி நமக்கொரு மறுபிறவி உண்டென்றால்
என் மகவாகப் பிறப்பெடு
அதுவரை அப்பிறப்பில்
என் கருவறையும் காத்திருக்கும்......!!!!!!!!!!!!!!!!