என் காதல் ஜெயித்தது
நீ களைப்பான நேரத்தில்
இளைப்பாற ஒரு நாள்
என் கல்லறைப் பக்கம்
வருவாயென்று தான்
இறைவனிடம் என்
கண்களின் உயிரை மட்டும்
கடனாக வாங்கி
இதுவரை ஒரு
முடனாகப் படுத்திருந்தேன்
நீயும் வந்தாய்
ஒரு துளி கண்ணீரும்
தந்தாய்..
என் காதல் ஜெயித்தது
இறைவனிடம் நான் பட்ட
கடனும் தீர்ந்தது
இனி நிம்மதியாய் உறங்குவேன்
என்றும் உன் நினைவுகளுடன்...