உற்ற தமிழ் நம் உயிர்

உயிரினும் மேலாம் உயர்தமிழ் போற்றார்
பெயரளவில் வாழும் பிணமாவர்; - தீயினும்
பொல்லா திவரைப் பொசுக்கி தமிழ்வளர
அல்லா தவற்றை அகற்று !

அகற்றலும் யாப்பை அறவே மறத்தலும்
மிகப்பெரிய பாவம் மீள்வீர்; - சுகமாய்
பிறமொழி கலந்து பிதற்றும் சிறியோர்
பிறப்பே தமிழின் பிணி !

பிணியகலும் நல்ல பெயரீனும் எண்ணித்
துணிவுடன் தூயதமிழ்ப் போற்று ; - கணினி
அறிவியல் சார்ந்திட்ட அத்தனையும் சீராய்
செறிவாய் மொழியாக்கம் செய் !

எழுதியவர் : வெ. நாதமணி (8-Jul-13, 8:19 pm)
பார்வை : 55

மேலே