கிராமம்

இந்தியாவின் முன்னேற்றம்
கிராமங்களில் !

ரூபாய் நோட்டில் சிரித்து
நம்மை ஏளனம் செய்தபடி
கூறிச்சென்ற பொன்மொழிகள் !

'கிராமம்"

பலருக்கு அவமானம் !

சிலருக்கு அருவறுக்கத்தக்கச்சொல் !


என்ன பாவம் செய்தது ?!


உண்டு உயிர்த்து வாழ

உணவினை சுத்தமான காற்றினை

கேட்காமல் ஈந்துகொண்டிருக்கிறதே..

அதுதான் பாவமா?


காலிடையில் கிழித்துக்கட்டியதை

கழுத்தை இறுக்கி சுற்றிக்கொண்டு

கவுரவம் என கானல்நீரைத்தேடி

ருசித்திட அலைகிறார்கள் !


ஆறறிவுபெற்ற அறிவிலிகள் !

பிணம் தின்னும் கழுகுகள் !


தனக்கு ஈந்திட்ட மாந்தர்தம்

நன்றிதனை மறந்தாய் ..


ஏனடா !

அவர்தம் உயிர்வாழ

வழிவகை செய்திட மறுக்கின்றாய் !


கிராமம் அளித்திட்ட

உயர் பண்பாட்டை அழித்தாய் !

பண்பாட்டிற்கு புதியசாயம் பூசினாய் !

நாகரிகபோதையில் தடமாறினாய் !

பெண்மையின் இலக்கணம் மறந்தாய் !

நன்றிக்கு அர்த்தம் தெரியவில்லை !

ஏனோ !

தமிழன் என மார்தட்டுகிறாய்..

தமிழனை மட்டம்தட்டுகிறாய்..


முலைக்காம்பில் முட்டிமோதி பசியாறும்

அஃறிணை உயிர்கூட

தன் இனத்திற்கெனவே வாழ்ந்திடும் !

ஆறறிவு பெற்ற ஆணவமோ !

புத்திகெட்டு

அஃறிணையைவிட கீழாய்..

பாழாய் போகிறாய் !

தமிழின பண்பாட்டை அறிவாயோ ?

அற்பப்பதரே !

விருந்தோம்பலுக்கு இலக்கணம்
அமைத்தவர்கள் நாம்
அறிவாயோ ?

விருந்தோம்பலை உயிரினும் மேலாய் கருதியவர்கள் நாம்
அறிவாயோ ?

தவறிழைத்ததற்கு தன்னுயிர்
ஈந்தவனை பற்றி அறிவாயோ ?

அறிந்துகொள்

அப்பொழுது புரியும்

தமிழனின் பண்பாடும் வாழ்வும் !

கிராமத்தின் பண்பும் பயன்பாடும் !

அதன்பின்

ஊரறிய உரக்கக்கூறு

நான் தமிழன் என்று !

நான் தமிழன் என்று !

_ மகா




எழுதியவர் : மகா (18-Dec-10, 2:15 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 1252

மேலே