+காதலிக்கும் மனைவி!+
என்ன சாப்பிட்டாய்
என்று கேட்டால்
ஏதேனும் பொய்யை சொல்லி
எனக்கு சூடாய்
சப்பாத்தி கொடுத்துவிட்டு
பழைய சோற்றை சாப்பிட்டு சாப்பிட்டு
உப்பி போயிருக்கும் மனைவியே!
நீ என்ன காதலியா? மனைவியா?
அதற்கு என் மனைவியின் பதில்...
காதலிக்கும் மனைவி!