காதலை செய்தது யார்?

காதலை செய்தது யார்?
காதல் என்ன கடவுள் செய்த பொம்மையா?

அது உடைந்து போனால் அழுவதற்கு
நீ என்ன விவரம் இல்லா குழந்தையா!

காதல் மட்டும் வாழ்ந்தால் போதுமா!
காதலித்தவர்களும் வாழ வேண்டாமா!

காதல் பிறக்க இருவர் போதும்!
ஆனால் அதனை வாழவைக்க ஊரும் உறவும் வேண்டும்!
பலபேரின் உயிர்களைத் தின்றும்
காதலின் பசி இன்னும் அடங்கவில்லையா!

காதலிக்கும்போது விட்டுக்கொடுக்க அனைவருக்கும் பிடிக்கும்!
ஆனால் காதலையே விட்டுக்கொடுக்க சொல்லும்போது தான்
இரண்டு இதயமும் உயிரை விடத்துடிக்கும்!

காதல் என்றும் சுகம் தந்தால் பரவாயில்லை!
சுகத்தை தவிர
அனைத்தையும் கொடுத்து
கடைசியில் உயிரையும் கேட்கும்
இந்த காதலை செய்தது யார்?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Jul-13, 3:34 pm)
பார்வை : 94

மேலே