அன்பை போற்றுவோம் அகிலம் வெல்லுவோம்

உலக உயிர்களுக்கு இல்லாத பெருமை
மனிதனுக்கு மட்டும் கிடைத்தது அரிது
உணர்தலும் புரிதலும் சிந்தித்தாலும் என்று
ஆறாம் அறிவு கிடைத்தது பெரிது .........

ஓர் அறிவை கூட பெற்றவன்
ஒன்றும் புரியாமல் குழம்பி கிடக்கிறான்
மனிதனாய் பிறந்தும் மனிதனை எதிர்த்து
சண்டையிட்டே மடிந்து போகிறான் ...........

தலைக்கனம் பிடித்து தாவி குதிக்கிறான்
கொலைவெறி பிடித்து கொலையும் செய்கிறான்
பிறறதை பிடுங்கி தனதாய் மாத்துறான்
பித்து பிடித்தவனாய் வாழ்ந்து மடிகிறான் ............

இணத்தை கொள்ளும் கொடுமை அதை
மிருகங்கள் கூட மறுத்து வாழ்ந்திட
மனிதமனம் மட்டும் எங்கோ போனது
மரணம் தேடி மதத்திற்கு போனது .............

கடவுளை வணங்கும் வழக்கம் கொண்டவன்
கடவுள் சொன்னதை காற்றில் விட்டுட்டான்
அன்பை வளர்க்க சொன்னதை மறந்து
அழிவை வளர்க்க ஆயுதம் பூண்டான் ...............

மனிதனின் அடிப்படை மறந்து போனான்
அன்பை போற்ற அவனே மறந்தான்
அறிவை ஏற்க மறந்து போனதால்
மனித அழிவு இன்று அவசியமானது ................

மதத்தினை போதிக்கும் மனிதர்களுக்கு இடையில்
மனிதத்தை போதிக்க எவரும் இல்லை
உயிரற்ற மதத்திற்கு கொடுக்கும் இடத்தை
உயிருள்ள மனிதருக்கு கொடுப்பதே இல்லை ............

பறவை இனமும் மிருக கூட்டமும்
ஒன்றாய் வாழும் இந்த சூழலில்
ஒற்றுமை மறந்தவர்கள் மனிதர்கள் மட்டும்
ஓங்கி சொல்ல வெட்கம் கிட்டும் ................

உனக்கு நான் எனக்கு நீ என்னும்
ஒற்றுமை வளர்க்கும் கொள்கை அதனை
உணர்த்த இங்கு ஒருத்தரும் இல்லை
உயர்ந்த உள்ளம் எவரும் இல்லை ................

குட்டையை குழப்பி மீனை பிடிக்கும்
கொள்கையே இன்று சிறந்தாய் ஆனது
மனிதனை குழப்பி மந்தையாய் சேர்த்து
ஆதாயம் அடைவதே அரசியலாய் ஆனது .............

அன்பு மட்டுமே அகிம்சை கொடுக்கும்
மற்றது எல்லாம் ஆயுதம் தூக்கும்
இந்த உண்மை என்று புரியுமோ
அன்றுதான் உலகம் விளங்கும் .............

எழுதியவர் : வினாயகமுருகன் (9-Jul-13, 3:26 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 175

மேலே