செங்கல் சூளையோடு
வறுமையிலே பெத்த பிள்ளை
வயிறு காய்ந்து சேர் மிதித்து
கல் அச்சு தேய்த்து தேய்த்து
கைரேகை தேய்ந்து போச்சு ................
ஓடிவிளையாட நேரமில்லே
கல்வி கற்க வாய்ப்பும் இல்லே
புத்தக சுமப்பதர்க்குப் பதில்
பொதி சுமந்தே காலம் தள்ள ...............
ஓர் வேளை உணவுக்காக
உழைத்து உழைத்தே கருத்துபோய்
உள்ளத்தோடு உடலும் மெலிந்து
உருகிப்போய் நிற்கிறோம் ............
நாளுக்கு நாள் உழைத்து பார்த்தும்
நாலு காசு சேர்க்கல
கண்முழித்து கஷ்டப்பட்டும்
எங்கள் கந்தல் நிலைமை மாறல.............
கொட்டும் மழையில் குடிசை மிதக்கும்
கொடுமை இன்னும் மாறல
எங்கள் குலம் வறுமைதாண்டி
ஏற்றம் இன்னும் காணல ..........
மண்ணெண்ணெய் விளக்கோடே
எங்கள் வாழ்க்கை கழியிது
மறுமலர்ச்சி எதுவுமில்லே
எங்கள் இருண்டுபோன வாழ்விலே ............
வேலைக்கு போகும் பெண்கள் பாட்டை
விளக்கி சொல்ல முடியல
வேசியாக அவர்களை பார்க்கும்
கொடுமை இன்னும் மாறல ...............
மனிதனாக பிறந்தபோதும்
இயந்திரமாய் வாழுறோம்
மரணம் வரை சூளையிலே
உடல் தேய்ந்து சாகிறோம் .............