கடைசிவரையும் நம்பிக்கைதான்...

கடைசிவரையும் நம்பிக்கைதான்...
கடைசி வரை எல்லாம் நம்
முன்னே நின்றது நம்பிக்கை தானடா..

தாய் மண்ணை தினம் தினம் நேசித்தேன்
வீழ்ந்த வீரரை தினம் தினம் பூசித்தேன்
புதைகுழி மீதினில் சத்தியம் செய்தோம்
வேட்டுக்கள் தீர்த்து வெல்வோம் என்று...


உடல் உருகி உதிரமாய் சொரிந்தது
மண்ணில் பதித்த பாதங்கள்..
தமிழ் சேதனையின் வேதங்கள்.
எத்தனை எத்தனை வீரர்கள் இன்றும்
அடையாளம் இன்றி அந்த மண்ணில்
புதைந்துவிட்டு கிடக்கின்றோம்..

ஆயிரம் ஆயிரம் வீர விழுதுகளின்
வேரடி மண் துடைக்கப்பட்ட சிங்களத்தின்
பௌத்த பேரின வாதம் அடியோடு அழியும்
இதுஉறுதி ....
நம்பிக்கை கண்முன்னே தெரிகின்றது...

எழுதியவர் : Anthanan (11-Jul-13, 1:34 am)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 100

மேலே