உன்னை தவிர...............

மனம் மட்டுமே என்னுள்
கேள்வியாக?
மற்றதெல்லாம் என்னுள்
வேள்வியாக?
என் நேசத்திற்கு யார்தான்
சாட்சியாக?

அலை அலையாக திரிகிறேன்
காற்றில் உன் சுவாசத்தை தேடி...

அனல் அனலாக சுழற்கிறேன்
பாலில் உன் மென்மையை தேடி......

காலத்தின் மேல் பழி சொல்லி
என்னை விட்டுவிடலாம்
கானலில் விற்றும் விடலாம் ..........

நினைத்து நினைத்து மரத்து போன
என் நினைவிற்கு தெரிவதில்லை
நிஜத்தில் நீ நின்றால் கூட.........

எந்தெந்த இடங்களில்
உன்னால் மகிழ்ச்சியோடு
நின்றிருந்தோனோ
அந்த இடங்களில்
இன்னும் நிற்கிறேன்
மென்மையான நினைவுகளோடும்
கணத்த இதயத்தோடும்
கண்களில் கண்ணீரோடும் ................

காரணங்கள் வந்து வந்து போகும்
நான் என்ன காகிதமா?
எழுதி எழுதி அழித்திட
எழுதாமலே கிழித்திட ..........

இதையும் எதையும்
யாரை கேட்பேன்
உன்னை தவிர...............

Written by,,,,,,,
ஆனந்தி.ரா

எழுதியவர் : ஆனந்தி.ரா (11-Jul-13, 12:06 pm)
Tanglish : unnai thavira
பார்வை : 274

மேலே