கலையாட்டு விழா

----- கலையாட்டு விழா-----

பரிதாப பார்வைகளுக்கு சிக்கி தவிக்கும் குழந்தைகளை எடுத்து கொஞ்சி மகிழ்ந்து கொண்டாடும் ஒரு நிகழ்ச்சி இது. கலையாட்டு விழா -- சமூக விளிம்பில் சாதிக்க துடிக்கும் பல கலைஞனை, வீரனை தேடி கண்டறிந்து அவர்களுக்கான பாதையை மேடையை அமைத்து தரும் சிறு முயற்சி. பல சமூக நல விரும்பிகளின் பங்களிப்போடு ஆதரவற்ற குழந்தைகளுக்கான கலை அறிவு மற்றும் விளையாட்டு போட்டிகள் கடந்த ஜூலை 7ஆம் தேதி இனிதே நிறைவு பெற்றது. குழந்தைகளின் அதிரும் சிரிப்பொலியும் கைத்தட்டும் சத்தமும் நாங்கள் எதிர்பாராத விருதுகள். ஐந்தாறு சின்னஞ்சிறு குழந்தைகளின் பிஞ்சு விரல்கள் எங்கள் எல்லோர் கைகளையும் எப்போதும் பற்றி கொண்டே இருந்தது நிகழ்ச்சி முழுதும். பரிசுகளை பெற்ற குழந்தைகள் பரிசு பொருளை விட அங்கீகாரத்தை உள்ளூர அனுபவித்து மகிழ்வதை காண முடிந்தது. அதுவே இந்த கலையாட்டு விழாவின் சிறப்பாக கருதுகிறோம்.

முகம் தெரியாத பல நல்ல மனிதர்களிடம் நிதி மற்றும் பொருள் பெற்று கொண்டு இந்த நிகழ்வின் வாயிலாக அவர்களுக்கான அங்கிகாரத்தையும் புகழையும் நாம் திருடி கொண்டிருக்கிறோம் என்கிற குற்ற உணர்வை தாண்டி எங்கள் முகம் முழுக்க நிறைத்திருக்கிறது புன்னகை. மனம் முழுக்க அடைந்திருக்கிறது நிம்மதி.

நாணல் நண்பர்கள்,
மதுரை.

எழுதியவர் : நாணல் நண்பர்கள் குழு (11-Jul-13, 4:59 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 115

மேலே