நான் அனாதை தான்
காலை விடிந்ததையே அறியாமல்,
வெகுநேரம் எழ மறந்து உறங்குகிறேன்,
உன் குறுஞ்செய்தி வராததால்.
முக புத்தகத்தில் உன் பதிவு இல்லாததால்,
முக புத்தகம் என்று இருப்பதையே
மறந்து விடுகிறேன் சில சமயங்களில்.
உன்னால் கிடைத்த உறவுகள்
பல இருந்தாலும்,
உன் உறவு இல்லையெனில்,
என்றுமே நான் அனாதை தான்.
இப்படிக்கு உன் அன்பு என்னும்
உறவில் ஒரு கிளை.