வெற்றி உறுதி........

காற்றுக்கேது சிறகுகள்
வெற்றி எனும் வானம் வரை
அழைத்து செல்ல...

நமக்கேது அதிர்ஷ்டம் எல்லாம்
தானாக கிடைத்து விட...

உன் எண்ணம் சிறப்பாய் உன்
மனதின் சிறகாய் இருக்கட்டும்...

உன் பலத்தை உன் மனம்
முதலில் உணரட்டும்...

நண்பா - தனியாய் போராடு
சாதனைகள் ஒவ்வொன்றும்
சரித்திரம் ஆகட்டும்...

வேதனைகள் வெள்ளமாய்
மறைந்து போகட்டும்....

அவமானங்கள் உன் வெற்றியின்
அடையாளம் ஆகட்டும்...

அலை என்னும் ஆசை சென்ற
இடமெல்லாம் தடம் பதிக்கட்டும்...

நம்பிக்கை எனும் தேரில் ஏறு
நாளை இந்த உலகமே உனக்காக
காத்திருக்கட்டும்...

வாழ்த்துக்களுடன் உன்
எண்ணங்கள்...

Written by,,,,,,,,,,,,


ஆனந்தி.ரா

எழுதியவர் : ஆனந்தி.ரா (12-Jul-13, 10:07 am)
Tanglish : vettri uruthi
பார்வை : 267

மேலே