நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

உலகம், உறவு மதிக்கும் உன்னை
உன் நிலை உயர்வில் இருந்தால்
தாழ்வு நிலை வந்துவிட்டால் இந்த
வாழும் உலகம் உன்னை ஏசும்
உன்னை கொண்டு வேலை இருந்தால்
வாழ்த்தும் உன்னை போற்றும்
கதை முடிந்த பின்னால் உதறி விட்டு
உன்னை பழி போட்டு பாவமாய் தூற்றும்
உலகம் எல்லாம் இப்படி என்றால்
சொந்த உறவுகளும் கூட அப்படித்தான்
இட்டுக்கட்டி கதைகள் பேசும் இனி
இல்லாததை சொல்லி காட்டும்
காசு உள்ளவனிடம் கருத்து கேட்கும்
காக்கா வெள்ளை என்று ஆமா போடும்
உண்மையை கூற இனி நாவு ஏழாது
பொய்யை சொல்லி நம்ப செய்யும்
உலகம் ஒரு நாடக மேடை –இங்கே
ஏமாற்றும் உறவும், ஏமார்ந்த நாமும்
தாழ்ந்தவனை உயர்த்த நினைக்காது
பணம் தரத்தில் உள்ளவனை வாழ்த்தும்
வாழும் உன் நிலை இறங்கி விட்டால்
இந்த உறவுகள் உன்னை மிதிக்கும் .......
ஸ்ரீவை.காதர்.