உயர்வு வரும் ஒரு நாள் !

உயர்வு தாழ்வு உனனிடம் இருக்கு
இறைவன் படைப்பில் இல்லாத கணக்கு

வேறு படுத்துவதும் வேற்றுமை காண்பதும்
உலகில் நாம் கற்று கொண்ட பாடம்

பணம் படைத்தவன் படை கொள்வான்
புடை சூழ நின்று புகழ் கொண்டு

உண்மை எங்கே நிலைக்கும் –உலகில்
பொய் நம்பும் படியே இருக்கும்

இட்டுக்கட்டி பேசும் கதைதான்
இறுதி வரை நம்பும் உலகம்

வெளி தோற்றம் வெண் சிரிப்பு
நல்லவன் என்று ஊரே நம்பும்

உண்மையை சொன்னா நம்பாது
உலகமும் உன்னை சேர்க்காது

இறைவனுக்கு மட்டுமே உண்மை தெரியும்
உயர்த்தி வைப்பான் தாழ்வு நிலையை

உயர்வு வரும் இன்ஷா அல்லா ஒரு நாள்
உயரும் உன் நிலையும் அன்று வரும் நாள்


-ஸ்ரீவை.காதர்-

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (13-Jul-13, 11:31 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 122

மேலே