நான் கடவுள்

ஊருக்கு உபதேசம்
ஒரு நாள் ஒரு வேஷம்
நாடகம் தினம் போட்டு
நல்லவனாய் நடிக்கிறாய் நீ .........

கண்ணில் தெரியும் மனிதனை விட்டு
காண முடியாத என்னை தேட
எதை எதையோ நீ செய்கிறாய்
என்று நீ என்னை புரிந்திருக்கிறாய் .............

உனக்குள்ளே நான் இருப்பேன்
உன்னை உணரு நான் தெரிவேன்
உன்னை நீ விட்டு விட்டு
எங்கய்யா எனை தேடுகிறாய் .............

கல்லாக நான் சமைந்தும்
கருணை வேண்டி என்னிடம் வர
மனிதனாய் வாழும் பலரை
நீ மறுப்பதற்கு அர்த்தம் என்ன ...........

பட்டினி கிடக்கும் பலபேர் இருக்க
ஏழை பச்சை குழந்தைகள் அழுது கிடக்க
பசியால் மடியும் மனிதர் இருக்கையில்
நான் பால் அபிஷேகம் கேட்டேனா ..............

குந்த குடிசை இல்லாத ஏழைகள்
தெருவுக்கு தெரு வீதியில் உறங்க
எதையும் தாங்கும் கற்சிலை நான்
உன்னை கோபுரம் கட்டசொல்லி கேட்டேனா .........

புதிய ஆடைகள் வாங்க முடியாமல்
கந்தல் உடையை காலத்திற்கும் உடுத்தி
ஏங்கும் பிள்ளைகள் எத்தனையோ இருக்க
எனக்கு பட்டுப் பீதாம்பரம் கேட்டேனா ...............

வரதட்சணைக்காக வாழ்வினை இழந்து
எழைபென்ன்கள் ஏங்கி கிடக்க
தங்கமும் வைரமும் வெள்ளிக்கட்டிகளும்
நான் காணிக்கையாய் கேட்டேனா ..............

மனிதனுக்காக கடவுளே தவிர
கடவுளுக்காக மனிதர் இல்லை
உன்னிடம் இருப்பது எனக்கு வேண்டாம்
உனக்கு மிஞ்சினால் ஊருக்கு கொடு ............

நீ என்னிடம் எதை எதிபார்க்கிறாயோ
அதையே நீ மற்றவருக்கும் கொடு
உன்னால் அவர் வாழ்வு சிறக்கும்
என்னால் உன் வாழ்வு சிறக்கும் ...........

எழுதியவர் : வினாயகமுருகன் (13-Jul-13, 3:32 pm)
Tanglish : naan kadavul
பார்வை : 89

மேலே