எனது குறிப்பேட்டின் பக்கங்கள்...[12]

எனக்கென்று
ஒரு தனி உலகம் உண்டு

அதை இயக்குவது என்னவோ
நீதானே!
[27]
+++++++++

என் மனதில்
வேறு என்னதான்
இருக்க முடியும்?...

உன் நினைவைத் தவிர !
[28]
++++++++++

அன்பே என்று அழைக்கிறேன்
அருகே வந்து நிற்கிறேன்
நினைவுகளுடன்.,

ஒரு கனவாய் நிலைத்த
உன்னிடத்தில் !
[29]
+++++++++++

உனக்கு
ஏற்புடையதான எதற்கும்
நானும் மாறுகிறேன்

அதுவாகவும்
அதற்காகவும் !
[30]
+++++++++++++

எதை நினைத்தாலும்
அதற்குள்
உனது
சில நினைவுகள்

விண்மீன்களிடை நிலவாகவும்
கதம்பத்தில் பூக்களாகவும் !
[31]
+++++++++++++

பிரசவிக்காத கருவை
ஆயுட்காலம் முழுவதும்
சுமக்கும் பாக்கியம்
எனக்கு மட்டுமே...

என் மனதில்
நீ !!
[32]
+++++++++++++
[ பக்கம்… 13..... தொடரும் ]

எழுதியவர் : ரத்தினமூர்த்தி கவிதைகள் (13-Jul-13, 11:55 am)
பார்வை : 90

மேலே