சின்னச்சாமியும் பொண்ணுத்தாயும்

அஞ்சு மணி பஸ்
பிடிச்சு
நடு இருக்கையிலே இடம்
பிடிச்சு
அன்னக்கொடி அக்காகிட்ட
ஆரப்பாளையம் டிக்கெட்
வாங்கி !
நிறைமாச பொண்ணுத்தாயும்
அவ புருசனும் போகையிலே !
சத்திரப்பட்டி சிக்னலில்
பேருந்து சில நிமிடம்
மூச்சு நிற்க
காரணம் தேடி நான்
புறம் நீட்ட
கலெக்டர் கண்ணகி
புதுசா கட்டுற பாலத்தை
பார்வையிடுகிறார்கள் என
காதில் எட்ட !
கடைசியில் ஒரு
வழியாய்
மருத்துவமனையின்
கதவை எட்ட
சுகப் பிரசவம், பெண் குழந்தை
என சொன்ன
பெண் டாக்டரின் சத்தம்
கேட்டு கேவி அழுதான்
சின்னச்சாமி
பெண் குழந்தை பிறந்ததற்கு !
அடப் பாவி பதறுகளா
உங்களை இதுக்கு மேல
புரிய வைக்க முடியாதுலே
என
கோபப்பட்டாள் சுவரில்
தொங்கிய பத்திரகாளி !
ஆக்கம்
கண்ணன்