மன்னிப்பு கடிதம் அம்மாவுக்கு........

அன்புள்ள அம்மா.....
எழுதுவது உன் மகன்....
உன் மனம் நோக....
நான் செய்த திருமணமும்....
உன் விழி கலங்க......
உன்னை விட்டு வந்த.....
நாட்களையும்....
நினைத்து பார்க்கயில்.......
என் இதயத்தை.....
ஒவ்வொரு முறையும் ....
தூக்கில் இடுகிறேன்....
அழகான குடும்பமும்....
அமைதியான வாழ்வும் ...
அளவான செல்வமும் ...
அத்தனை இருந்தாலும் ....
அனாதையாய் நிற்கிறேன் ...
அம்மா உன் அன்பு இல்லாமல்....
பெண் குழந்தை பிறந்தது என...
செவிலியர் சேதி அறிய ...
பிஞ்சு கை என் விரல்....
பற்றுகயில்தான்...
உணர்ந்தேன் நான் துளைத்த....
உன் அன்பை....
காதலின் சம்மததிற்காக.........
நான் சாப்பிடாமல் ...
உன் வயிரை பட்டினி போட்டு.......
காணாமல் போய்யிருகேன் ....
இன்று ...
உன் விரல் நுனி சோறும் ...
நீ வீசும் கைவிசிறி காற்றும் ...
உன் மடிதூக்கமும் .....
உன் முந்தானை வாசமும் ...
இப்போது எட்டாத துரத்தில் ...
எட்டாமலேயே போனது ....
என் பிஞ்சு குழந்தை...
பிரம்பால் அடிக்கயில் ...
விளையாட்டாய் அம்மா என அலற....
குழந்தை சிரிப்பில்....
என் குமுறல் மறைத்தாலும் ...
ஒரு நொடி உச்சரிப்பு.....
ஓரமாய் நெகிழ்ந்தது ....
என் குழந்தைக்கு....
உன் முத்தமும் ...
உன் பாதம் தொட....
எனக்கு ஒரு தருணமும் ....
நீ சூடும் பூக்கள்.....
உன் மருமகளுக்கும்மாய் ....
கற்பனையாய் எனது காலம்,,,,
கடந்து நாட்கள் நகருது ....
ஒரு வேளை ...
உன்னை பிரியாமல்.....
இருந்திருந்தால்...
இத்தனை முறை நினைதிருபேனா...
என தெரியவில்லை ...
இப்போது எத்தனை முறை...
நினைத்து விழித்தாலும்....
உன் பிம்பம் என் முன் இல்லை ...
கண்ணிர் மட்டும் தான் என்னோடு...
நீ இல்லாத வாழ்வு....
துயரம் தான் எனக்கு ...
மன்னிப்போடு சமர்பிக்கிறேன்....
இந்த கடிதம் உனக்கு....
என் வீடு பூஜை அறை பூக்கள்....
உன் விரலுக்காக வாடுது ...
ஆம் நானும் தான் ............
பூக்கள் நீ தொடுபதற்காக....
நாங்கள் உன் தொடர்புகாக............
-அமுதநிலா

எழுதியவர் : amuthanila (15-Jul-13, 1:16 pm)
பார்வை : 606

மேலே