+தாமதிக்காதே!+
தாமதிக்காதே!
மதி இருந்தால்
தாமதிக்காதே!
தாமதத்தை
நீ மதித்தால்
தாமதமும்
சில நேரம்
உனை மதிக்காதே!
நல்வினை புரிய
நற்சொல் உரைக்க
நற்கவி புனைய
தாமதிக்காதே!
நற்செயல்
எங்கு நடந்தாலும்
அதனை பாராட்ட
தாமதிக்காதே!
நல்ல சொல்
எங்கு காதில் விழுந்தாலும்
அதனை பரப்ப
தாமதிக்காதே!
தாமதத்தை
நீ அனுமதிக்காதே!
அனுமதித்தால்
எதுவும் ஆதரிக்காதே!
தாமதம்
வாழ்ந்திட சம்மதிக்காதே!
தாமதம்
பற்றிட கரம்கொடுக்காதே!
தாமதமும்
ஒரு விஷமே!
அதனை தாண்டிவிட்டால்
எல்லாமே
நம் வசமே!