ஞாயிறு வந்ததும் எனக்கு சனி பிடித்ததும்

வாரம் ஒரு முறை
ஞாயிறு வருகிறது
அன்றுதான் நண்பர்கள்
முகம் காண முடிகிறது

வாரம் முழுவதும்
வேலை கலப்பை 10 மணி வரை
தூங்கி கழிக்கிறோம் அன்று மட்டும்

வெளியே செல்ல
எண்ணமில்லை
வீட்டுக்குள் முடங்கவும்
மனமில்லை

நண்பர்களை அழைத்து விட்டு
ஆன் செய்தேன் தொலைக்காட்சி பெட்டியினை

விளம்பர இடைவேளை போல்
நண்பர்கள் ஒருஒருவராய்
வந்து சேர்ந்தனர்
என் வாடகை வசிப்பிடத்திற்கு

சில நேரம் சிரித்துவிட்டு
சிக்கனையும் சமைத்துவிட்டு
சாப்பிட உக்கார்ந்தால்

ஒருதர்முகம் ஒருத்தர் பார்க்க
ஒருவன் மட்டும் ஓடிபோய்
வாங்கி வந்தான்
சில பீர் பாட்டில்களை

வழகமாக குடிப்பதில்லை
கடைசியாக வாய் வைத்தது
தை மாதத்தில்

இன்றும் குடிக்க மனமில்லை
பசியில் அடி வயிரு கிள்ள
அமர்ந்துவிட்டேன் சாப்பிட

நண்பர்கள் ஓரிரு பாட்டில்களை
குடித்து முடித்தனர்
எனக்கும் சத்திய சோதனை ஆரம்பமானது

ஒருவன் சிரிக்கிறான்
ஒருவன் அழுகிறான்
இன்னொருவனோ முறைக்கிறான்
நானோ சிரித்து அழுதேன்

சில நிமிடம் போனது
எல்லோருடைய முகமும்
என் பக்கம் திரும்பியது

நீ ஏன்டா குடிக்கல
என்னோடலாம் நீ குடிக்கமாட்டிய
என்றான் ஒருத்தன்
அவன் பெரிய ஆளுடா
அவன் நம்மகூட குடிக்க மாட்டன் என்றான்
இன்னொருத்தன்

என்ன செய்வது சில நிமிடம்
சமாளித்து பார்த்தேன் முடியவில்லை
மணி 12.30 ஒரு பீர் ஐ குடித்துவிடேன்

9 மணி வரை நல்ல உறக்கம்
நண்பர்கள் ஒருஒருவராய்
ஏல தொடங்கினர்

நண்பர்கள் இருவரை
பேருந்து நிலையம் கொண்டுபோய்
விட வேண்டிய சூழ்நிலை
முடியாதென்றல் முறைப்பார்கள்
என்று எண்ணி வண்டியை எடுத்தேன்

இரவு நேர சாலை
அமைதியாய் இருந்தது
இரு சக்கர வாகனனும்
கூட சாலையில் இல்லை

என்னடா நம்ம ரோடு தானா
என்று எண்ணி முடிக்கவில்லை
எதிரே வெள்ளை சட்டை காவல்காரன்
கை நீட்டி எங்களை நிறுத்த
தடுமாறி நெருதினேன்

என்ன செய்வது என்று புரியவில்லை
வாய் ஊத சொன்னார்கள்
வழக்கையும் போட்டார்கள்

இரவு 1 வரை
காவல் நிலைய கொசுக்கடியில்
பல கொசுக்களை கொன்றுவிட
விடுவித்தார்கள்

இதற்கிடையில்
என் நண்பன் ஒருவன்
சார் என்னைய வச்சுகோங்க
என் நண்பனை விடுருங்கோ
என்று வெள்ளை சட்டையிடம்
காமெடி பண்ணிகொடிருந்தான்

எல்லாம் முடிந்துவிட்டது
நண்பர்களின் போதையும் இறங்கிவிட்டது
வரும் வியாழன் நீதிமன்றம்
செல்ல வேண்டும் அபராதம் கட்ட

விற்றவன் குற்றவாளி இல்லை
குடித்தவன் குற்றவாளி
பிடித்தவன் குற்றவாளி இல்லை
அவனிடம் பேரம் பேசாத நாங்கள் குற்றவாளி

எங்களோட பிடிக்கப்பட்ட
10 பேர் வழியிலேயே காணமல் போனார்கள்
நாங்கள் மட்டும் பலியாகிவிட்டோம்
வெள்ளை சட்டை நீதிக்கு முன்னால்

கோவம் வருகிறது
பயமும் வருகிறது நண்பர்கள்மேல்
இந்த வரம் இத சொல்லி
ட்ரீட் கேப்பாங்களே அய்யயோ......

எழுதியவர் : பாலமுதன் ஆ (15-Jul-13, 11:31 pm)
பார்வை : 296

மேலே