என் தங்கையின் மனம்

அன்புக்கு இலக்கணமாய்
ஆறுதலுக்கு அன்னையாய்
இன்னலில் தோழியாய்
ஈகையில் ஈடுயற்றவளாய்
உண்மையின் உறைவிடமாய்
ஊக்கத்தின் உருவமாய்
எண்ணங்களின் எழுச்சியாய்
ஏக்கங்களின் ஏழையாய்
ஐயங்களின் அழிவிடமாய்
ஒப்பற்ற...
ஓர் உலகமெனில் - என்
தங்கையின் உள்ளம்...
அவளே என் உலகம்...