வீணாத்தான் போனதோ!
![](https://eluthu.com/images/loading.gif)
வருவாய் தருவாய் பெறுவாயென
தெருவாசல் நின்றழைக்கும் வேசியென
அரசுத் துறையினரும் இழிக்கிறார்
கருமஞ் செய்திடவும் கைக்கூலி கேட்கிறார்.
வசூல் ராசாக்களின் கோட்ட அலுவலங்கள்
மாமூல் தாதாக்களின் வட்டார மையங்கள்.
சுங்கப் பங்குகளாய் அங்கங்கு வேட்டைகள்.
எங்கும் கொள்ளைகள் இவர்களே காவலர்கள்! .
இதுதான் சாதனையோ!
இதற்குத்தான் சுதந்திரமோ!
எத்தனை தியாகங்கள்!
எத்தனை உயிர் பலிகள!
அடசண்டாள நீசர்களே!!
விடுதலைப் போராட்டமே
வீணாத்தான் போனதோ!
வீணரிடம் அடிமையோ!
சபாகரா,