நீ என் மகனாக பிறந்திருக்க கூடாதா!
![](https://eluthu.com/images/loading.gif)
கருவறை கொடுத்தேன்!
உடல் கொடுத்தேன் !
உயிர் கொடுத்தேன் !
பிறப்பு கொடுத்தேன் !
உதிரத்தை பாலாக்கி கொடுத்தேன் !
அவன் தலை சாய!
மடி கொடுத்தேன் !
அவன் பிணி போக என்
தூக்கம் கொடுத்தேன் !
அவன் செழிக்க கல்வி கொடுத்தேன் !
அவன் காதலுக்காக என்
தன்மானம் கொடுத்தேன் !
அவன் தொழிலுக்காக என் கணவரின்
உழைப்பை கொடுத்தேன்!
எல்லாம் கொடுத்தேன் !
இனி கொடுக்க எதுவுமில்லை என்னிடம் !
நான் ஒரு நாள் உணவு கொடுத்த
நன்றியுள்ள ஐந்தறிவு தெரு நாய்
கொடுத்தது ஒரு வேளை
உணவு எனக்கு !
நீ என் மகனாக பிறந்திருக்க கூடாதா!