கவலை......

இதயம் இரண்டான வலி
இடையே கல் வைத்த கணம்
ஆர்பரிக்கும் உதடு அசைய மறுக்கிறது
அழகு முகமும் அறுங்கோணம் ஆனது
படக்கும் இமை கூட பசையில்லாமல் போனது
படகென கண்கள் கண்ணீர் கடலில்
சொந்த வார்த்தைகள் கூட வந்தபாடில்லை
தொண்டையும் ஏனோ கொண்டி போட்டது
ஊறும் வண்டு உணர்ச்சியற்று போனது -உடம்பு
ஊண் கூட உள்ளிழுக்க மறுக்கிறது
இரும்பு கரம் கொண்டு இறுக்கி பிடிக்கும்
கவலை......

எழுதியவர் : ரதி (18-Jul-13, 5:08 pm)
சேர்த்தது : kumareshkumar
Tanglish : kavalai
பார்வை : 71

மேலே