ஆடி வெள்ளி தேடி உன்னை சரணடைந்தேன் தேவி

அழகு விடிவெள்ளி மலரே வா
ஆடி வெள்ளி இன்று அருகே வா
இதயம் மகிழ்வுறவே நாமிருவரும்
ஈசன் மனையாளை வணங்கி வருவோம்...!!!
உயர்ந்த வாழ்வினை அவள் தருவாள்
ஊழ்வினை போக்கவே வரம் அருள்வாள்
என்றுமே இன்பமாய் வாழ வைப்பாள்....!!!!
ஏதும் அறியா மழலை மனம்
ஐங்கிரி நந்தினி அளித்திடுவாள்....
ஒளி மயம் நினைவினில் நிறைந்திடவே
ஓங்கார இசையென அவள் இருப்பாள்....
ஓம் சக்தி....பரா சக்தி....
ஓம் சக்தி....பரா சக்தி
ஓம் சக்தி....பரா சக்தி