வாலி

வந்தாரை வரவேற்று
வாழவைக்கும் சென்னை
ரங்கராஜனையும் வரவேற்றது !
வாழ்ந்து காட்டுவேன் என்ற வைராக்கியம் ,
விருப்பு வெறுப்புகளை விடுத்து,
விமர்சனங்கள் பல கடந்து,
'வாலி' என்ற புனைப்பெயருடன் ,
அன்று முதல் இன்று வரை
வயது வரம்பில்லாமல்
வசியப்படுத்தும் பாடல்களை
வழங்கிய வாலிபக்கவிஞரின்
வாழ்க்கை முடிந்தாலும் ,
வரிகள் அழியாது
நூற்றாண்டுகள் பல கடந்தாலும் !!

எழுதியவர் : ப்ரியா சக்திவேல் (19-Jul-13, 4:46 pm)
சேர்த்தது : priya sakthivel
பார்வை : 60

மேலே