வாலி

வார்த்தைகள் தவித்து நிற்க
உடல் தவிர்த்து எங்கே சென்றாய் வாலி

பல தலைமுறை கண்டபோதும்
இல்லை வரைமுறையென கானம் தந்தாய்

பாமரனும் இரசித்துப் பாட
பழகுத் தமிழிலேயே பாடல் தந்தாய்

இசையமைப்பாளர் தத்தகாரம் சொல்வதற்குள்
சொற்களாலே செய்திடுவாயே அலங்காரம்

ஓங்கிய புகழ் அடைந்தாலும்
தேங்கிய நதிபோல அமைதி காத்தாய்.

யாருக்கும் தலைவணங்கா தமிழ் தாத்தா -நீ
எமனுக்கு தலைவணங்கியா உயிர் நீத்தாய்?

உன் அடியொற்றி பாடல் புனையும் புலவர்கள்-இனி
மடிவற்றிப் போன மாடுகளாய் திரிவார்களே.

உன் தமிழ் நடை கண்டு மகிழ்ந்து நின்ற தமிழ் அன்னை
நீ விடை கொண்டு போனதற்கு வருந்துகிறாள்.

யாருக்கும் பகையில்லா புலவனே,
தமிழ் சினிமாவின் பாடல்களின் உழவனே.

நீ வணங்கிய முருகப் பெருமானின் திருவடி நிழலில் ஓய்வெடு,
மீண்டும் வருவதற்கு வாய்ப்பிருந்தால் உடனே நீ வந்திடு.


கவிஞர் மு.பாலசுப்ரமணி
நாமக்கல் .

எழுதியவர் : மு.பாலசுப்ரமணி (20-Jul-13, 2:32 am)
பார்வை : 100

மேலே