இணையான ஒன்றுதான்
![](https://eluthu.com/images/loading.gif)
அறியாப் பருவத்தின் புரியா செய்கையா
அறிந்தே செய்திடும் விளையாட்டா !
பால்யப் பருவங்களின் பகுதி நேரமா
பாச மழையில் பொழிந்திடும் நேசமா !
நீரைப் பார்த்ததும் மகிழ்வின் துள்ளலா
நீயும் நானும் சமமென்ற எண்ணமா !
பொங்கிய கோபத்தில் தாக்கிடும் கோலமா
தேங்கிய அன்பினை காட்டிடும் சூழலா !
ஆண் ஆதிக்கத்தின் ஆரம்ப காட்சியா
பெண்மையின் பொறுமைக்கு சாட்சியா !
பாலினம் பாரினில் இணையான ஒன்றுதான்
வேலிக்குள் வாழும் வேங்கை கூட்டம்தான் !
பழனி குமார்