இளைய குடிமகனே!!!!!
இளைய குடிமகனே
ஏற்றமிகு வாழ்வின் தலைமகனே
ஓயாது உழைக்கும் உழைப்பாளியே
ஒரு நிமிட இன்பத்திற்கு ஆசைப்பட்டு
உயிரேயே இழக்கிறாய்
குடிக்க கூழ் இல்லாமல்
குடும்பம் திண்டாடுகிறது -நீயோ
குடித்து திண்டாடுகிறாய் !
கண்ணீர் சிந்தி
களை பறித்த ஊதியத்தை -நீ
கல்லூரி செல்ல அனுப்புகிறாள்
உன் தாய்
ஆனால்
கல்வியை தொட வேண்டிய நீயோ
மதுக்கடையை தேடி செல்கிறாய்
குடிகாக்கும் குடி மகனே
குடியை ஒழித்திடுவாய்
குடும்பத்தை காத்திடுவாய் .................