மானம் ஒன்றே பெரியது
மானமே உயிர் என்று
வாழ்ந்துவரும் மனிதருண்டு
ஒழுக்கத்தையே உயர்வாய் நினைத்து
உலகில் வாழும் மனிதருண்டு .............
நீதியை போற்றிடுவார்
மனித நியதிப்படி வாழ்ந்திடுவார்
நேர்வழியில் நடந்திடுவார்
நீதி மானாய் காலம் கடப்பார் .........
நற் செயல்கள் செய்திடுவார்
நற் கருத்துக்கள் எடுத்துரைப்பார்
பிறர் வாழ இவர் சிரிப்பார்
பிறருக்காகவும் வாழ்ந்திடுவார் .........
தீமைகளை ஒதுக்கிடுவார்
தீயவர்களை வெறுத்திடுவார்
கொடுமைகளை தடுத்திடுவார்
கொள்கையோடு வாழ்ந்திடுவார் ...........
தீங்குசொல் பொறுக்கமாட்டார்
தீய செயல்களை தாங்கமாட்டார்
தன்மானம் கெடும் வேலையும்
தன்னுயிரையும் மாய்க்க துணிவார் ..........
தன்மானம் தன்னுயிராய்
தலை நிமிர்ந்து வாழ்ந்திடுவார்
மானத்திற்கு ஈனம் வந்தால்
மரணம் பூண்டு மடிந்துபோவார் ...........