நிழல் ஒன்று வேண்டும்

நிழல் ஒன்று வேண்டும் இறைவா
நீயதனை கொடு இறைவா
ஓய்வெடுக்க இடம் வேண்டும்
ஒருபிள்ளை வரம் வேண்டும் ...........

தனி மனித போராட்டம்
சலித்து போனது எனது வாழ்வில்
உறவொன்று கொண்டு வந்து
உற்ச்சாகம் கொடு இறைவா ..........

காசுபணம் கேட்கவில்லை
காரும் வீடும் கேட்கவில்லை
என் பேர்சொல்ல பிள்ளை ஒன்றை
என் பிறவிக்கு பயனாய் கொடு இறைவா ........

கை கால்கள் ஊனமாயும் காதும் கண்கள் ஊனமாயும்
கருணை காட்டும் உலகமிதில்
பிள்ளை ஒன்று இல்லாவிட்டால்
ஏளனமாய் சிரிக்குதைய்யா .............

ஊர் கூடும் உறவும் கூடும்
ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து மகிழும்
நான் மட்டும் ஒதுங்கி நிற்கிறேன்
காய்க்காத பூ என்பதனால் ..........

காலத்தின் ஓட்டத்தில்
கைப்பிடித்து நடந்துவர
ரத்த உறவு ஒன்று இல்லை
மொத்த உறவும் ஒதுக்குது என்னை ...........

இன்றைய நிலைமை இப்படியென்றால்
நாளை என்பது என்ன ஆவது
எனக்கான ஆறுதல் நிழலை
இன்றே உறுதிபடுத்து இறைவா ..........

இருவர் எப்போ மூவராவோம்
இருள் நீங்கி ஒலி பெறுவோம்
கைநீட்டி கேட்கிறேன் இறைவா
கையில் ஒரு பிள்ளை கொடு ..........

மண்டியிட்டு வேண்டுகிறேன்
மடிபிட்சை ஒன்று கொடு
கட்டில் சுகம் கண்ட எனக்கு
தொட்டில் சுகம் கொடு இறைவா .........

ஆயிரம் உறவு இருந்தபோதும்
அம்மா என்பதற்கு இணையாகுமா
ஆசையாய் காத்திருந்தும்
அள்ளி கொஞ்ச வாய்ப்பில்லையே ...........

மசக்கை கொண்டு மயங்க வேண்டும்
மாதம் பத்து சுமக்க வேண்டும்
சுகமான வலி வேண்டும்
பிள்ளை பெற்றெடுக்கும் பாக்கியம் வேண்டும் ........

பூக்கின்ற பூக்கள் எல்லாம்
காய்த்து கனியவைக்கும் இறைவா
பூத்திருக்கும் பூ என்னை
காய்க்க வைக்கும் நாள் என்றோ ?

எழுதியவர் : வினாயகமுருகன் (21-Jul-13, 2:50 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : nizhal ondru vENtum
பார்வை : 169

மேலே