மனிதா பேராசை வேண்டாம்
நிம்மதி வேண்டும் உம்மதில் என்றும்
சீராய் வாழ்ந்து சிக்கனம் பழகு
இருப்பதாய் விட்டு விட்டு
பறப்பதற்கு அலையாதே ..............
போதுமென்ற மனம் வை
பொறுமையை மனதில் கொள்
இருப்பதனை வைத்துக்கொண்டு
இனபமாக வாழ்ந்து வா .........
வரவிற்குள் செலவு செய்
வரம்பை மீறி போகாதே
பேராசை உன்னில் கொண்டு
புழுவாய் நெருப்பில் துடிக்காதே .........
சேர சேர ஆசை பெருகி
சேற்றிலே போய் விழுந்து
பேராசை பலம் பெற்று
பெருநஷ்டம் அடையாதே .............
உலகையே வளைக்க ஆசைகொண்டு
உன்னையே இழந்து விடாதே
மதிகொண்டு மயக்கம் தெலிந்து
தெளிந்து நில் வாழ்வை வாழ் .........