தனியே...தனியே...

ஊன்றும் பொழுதின் விதை நீ..
கண்டேன்...
முதல் மொட்டாய்..
முதல் பூவாய் ......
உணர்ந்தேன் ஸ்பரிசம்.....

மணித்துளிகளை விழுங்கிய
நாட்களுக்குள் மாதங்களின் புணர்ச்சி
வருடங்களாய் விளைவுகள்.......

ஏதும் நீ சொல்லாமலே..
நானும் நீயும் வளர
நீதான் நொடிதோறும் மணமாய்
என்னின் வீட்டிற்கும்
எனது காலை நடைப்பயிற்சி கால்களுக்கும்
தரை விரிப்பாய்...

இப்போதுதான் உன் ஸ்பரிசம்
முழுமையாய் அர்த்தத்துடன் உணர்கிறேன்
என் காதுகளிலும்,இமைகள் மீதும்
மார்பின் மேலும்.
நான் செல்லும் சாலையின் மீதும் ......


"லே ,மாலை மட்டும் போதும்லே
மொகம் மறைக்கும்
அந்தா ,பூவிதழ்களை எடுங்கலே "

ஒரு முறை உன்னை ஊன்றி
நீர் வார்த்ததற்கா......
இறுதிப்படுக்கையில்
என்னோடு நீ மட்டும்

எவரும்......
என்னோடு இல்லாத பொழுதில்..!!

எழுதியவர் : அகன் (22-Jul-13, 8:11 am)
பார்வை : 139

மேலே