சாய்ந்தது எழுதுகோல்
பழுத்தது இளமை
உதிர்ந்தது முதுமை
வருந்தவில்லை பாடல்கள்
கண்ணீர் சிந்தவில்லை
தமிழும் எழுதுகோலும் ...!
ஓய்ந்து விட்டதா?
நின்று விட்டதா?
இல்லை இல்லை
தேடுகிறது
மனம் உம பாடல்களையே...!
இளம் சிறார் முதல்
முதுமை சிறார் வரை
ஒலிக்கின்றதே
உம் பாடல் வரிகளும்
எப்போதும் செவி மடல்களில் ...!
எந்த நாளும் விடியாது
உந்தன் பாடல் வரிகளைக்
கேளாமல் விழிக்காது
என் மனமும் ...!
மனக் கதவை திறந்தாய்
அன்று
''மன்னவனே அழலாமா?''என்று
மனமெல்லாம் நிறைந்தாய்
இன்று
''வாழ்வே மாயம்'' என்று ..!
உன் மாயம் சொல்லும் ராகம்
இது தானோ கவிஞர் வாலியே ..!
உன்னை நாங்கள் பிரிந்தாலும்
உம் பாடல்கள் வான் முழுதும்
சரித்திரமாய் இன்றும் நாளையும்...!